பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


விருந்தினன் ஆமாம், நாம் முன்பே ஒரு முறை சந்தித்திருக்கிறோம். உண்மையென்னவெனில் அந்த விருந்தின்போது நீங்கள் எதிரில் இருப்பவர்களை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் உணவு வகைகளில் வைத்த கண் வாங்காமல் குனிந்த வண்ணம் சாப்பிட்டதால், உங்கள் திருமுகத்தை என்னால் காணமுடியாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும்” என்று மறுமொழி பகர்ந்தான். அந்த மற்றுமொரு விருந்தினன்.



41. மறைவாக உண்ணும் விருந்தளிப்பவன்

விருந்தினர்கள் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது வீட்டுக்காரன் உள்ளே சென்று முதன் முதலில் விருந்துணவை மறைவாகச் சுவைப்பதும் வழக்கம். ஒருமுறை விருந்தினர்களில் ஒருவன் வீட்டுக்காரன் உள்ளே சென்று மறைவாக விருந்துணவை உண்பதைக் கவனித்துவிட்டு, எல்லோரும் அறியும் வண்ணம் “இந்த விருந்துண்ணும் கூடம் மகத்தானது, ஆனால் எல்லாத் தூண்களும் குறுக்குச் சட்டங்களும் கட்டைகளும் கரையானால் தின்னப்படுகின்றன!” என்று உரக்கக் கூவினான்.“என்ன? என்ன” உணவை மறைவாக உள்ளே உண்டு கொண்டிருந்த வீட்டுக்காரன் வெளியே, ஒடிவந்தான். வந்தவன் “எங்கே கரையான்?” என்றான். “நல்லது அவற்றை நீங்கள் காணமுடியாது” என்றான் விருந்தினன். அவன் மேலும் “உண்பதெல்லாம் இங்கே உள்ளேதான் நடைபெறுகின்றன” எனத் தொடர்ந்தான். அந்த மனிதனின் மனத்தில் தைக்கும்படி விருந்தினன்.