பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த.கோவேந்தன், டிலிட்.,

45



42. திருடனிடமிருந்து தப்பிக்க

அறியாமைமிக்க மனிதன் ஒருவன் தன் வீட்டினுள் திருடன் ஒருவன் நுழைவதைக் கண்டான். விரைந்து சென்று “அனுமதி இல்லை” என்னும் வாசகம் எழுதிய பலகையை அறையின் முகப்பில் ஒட்டினான். ஆனால், பின்புறமுள்ள அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்படுவதைக் கண்டதும் “வெளியே செல்ல அனுமதி இல்லை” என்ற வாசகத்தை ஒட்டினான். பின்னர் உட்புற முள்ள அறையினுள் சென்று நடப்பதை மறைந்திருந்து கவனித்தான். அந்த அறிவிப்பு வாசகங்களை மீறித் திருடன் உள்ளே நுழைந்ததைக் கண்டதும், பயந்து கழிப்பறையினுள் சென்று மறைந்து கொண்டான். திருடனோ எதிர்பாராத வகையில் கழிவறை நோக்கிச் சொன்று கொண்டிருந்தான். இதனைக் கண்டு மேலும் கலக்கமுற்ற அந்த மனிதன் கழிவறைக் கதவினைக் கையினால் பலமாக அழுத்தி பிடித்துக் கொண்டு “கழிவறை உள்ளே ஏற்கனவே ஆள் இருக்கிறது” என்று கத்தினான்.

43. தவிர்க்க முடியாத எட்டாவது

மது அருந்த ஆசைகொண்டாள் ஒரு இல்லத்தரசி.ஆனால் அவள் கணவனோ அவள் ஆசையை நிறைவேற்ற மறுத்தான். அவன் சொன்னான் “குடும்பம் நடத்த ஏழு பொருள்கள்தான் இன்றியமையாதவை, அவை; விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, பருப்பு, புளி, தேயிலை என்று தான் சொல்லப்படுகிறது. மது அந்தக் குறிப்பில் காணப்படவில்லையே” என்று தன் மறுப்புக்கு விளக்கம் தந்தான் கணவன்.