பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற பற்பல நகைச்சுவை நறுக்குகள் நானிலத்திலும் உள்ளன. அவற்றைத் தேடி எடுத்துக் கொடுப்பதில் ஒரு சிலரே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று நாள்தோறும் உலக மொழிகளிலே விழிவைத்துப் பார்க்கின்றனர். அவர்களுள் ஒருவரே நம் புலவர் த. கோவேந்தன். அவர்கள் தொகுப்பு சீனா, ஜப்பான் நாட்டு நகைச் சுவை நறுக்குகள், துணுக்குகள் இங்கே உங்கள் கையில் அமர்ந்து சிரிக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாம் கற்பது மட்டுமின்றி தம் பிள்ளைகட்கும் தம் மாணவர்கட்கும் இந் நூலைத் தந்து சிரித்து மகிழ்ந்து வாழட்டும்.

இவண்,
நா. பாலகிருஷ்ணன்