பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


யோடு பார்த்தார் துறவி. தன்னைக் காமவெறியோடு வைத்தகண் வாங்காமல் காண்பதைக் கண்ட அப் பாவை சினம் அடைந்தாள். தவற்றைத் தொடர்ந்தால் அடிப்பேன் என்று அச்சுறுத்தினாள்.

அஞ்சிய அடியார் அடக்கத்தோடு கண்களை மூடிய வண்ணம் அமர்ந்திருந்தார். படகு கரைசேர்ந்ததும் அப்பாவை அடியாரை அடித்தாள். தண்டனையின் காரணம் அறியாது திருதிருவென்று விழித்தத் துறவி “இப்போது நான் தவறேதும் செய்யவில்லையே; பின் ஏன் என்னை அடிக்கிறீர்கள்?” என்று வினவினார். “மூடிய விழிகளுக்குள்ளே நீங்கள் என்னைக் கண்டீர்கள் அது திறந்த கண்களால் காண்பதினும் கொடிய பாவம்” என்றாள் அப்பாவை.

46. நலமான இறப்பு

மருத்துவம் பயின்ற மாணவன் ஒருவன் மருந்துகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் இதர விளைவுகள் பற்றியும் கற்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. நோயாளியின் நாடித் துடிப்பினைக் கணிந்தவுடனேயே மருந்தினைக் குறித்துக் கொடுத்து அருந்தும்படித் தன் நோயாளிகளிடம் சொல்லிவந்தான். அதன் விளைவாக பற்பல நோயாளிகள் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் சாக்காட்டிற்கு மருத்துவரே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். அப்போது மருத்துவர் “நோயில் வாடி மடிவதைக் காட்டிலும், நலமாய் சாவதே சிறந்தது என்று எண்ணி, அவர்கள்மீது கொண்ட இரக்கத்தால் அவர்களை நலமாய் இறக்கச் செய்தேன்” என்றார்.