பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்னுரை


மக்களாகிய நமக்கே சிரிக்கத் தெரியும். நண்பர்கள், உற்றார் உறவினர்கள் எல்லோருடனும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழ்வது போன்ற ஓர் இன்பம் வேறு இல்லவே இல்லை.

எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் தப்பேதும் இல்லாத மனம் உடையவர்கள். மனம் இறுக்கம் இருந்தால், மனக்கவலை தோன்றும். மனக்கவலைக்கு மருந்து நகைச்சுவையாகும். அந்த நகைச்சுவை அன்பில் முகிழ்விப்பது. அது நம்மைச் சூழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்ளது. நம் நடிப்புகளே சொற்களே செயல்களே நம்மையும் நானிலத்தையும் சிரிக்க வைக்கும் பாங்குடையன. உள்ளம் உரை செயல்களில் ஓங்கிய நகைச்சுவை நறுக்குகளே இந் நூல் தாெகுப்பு. படித்து நகையுங்கள். எல்லாப் பகையையும் வெல்லுங்கள். வாழ்க்கைத் திருவிழாவில் தொகை தொகையாய் இன்பம் பெருகும். துன்பம் அருகும்.

உலக நாடக மேடையில் நாம் விலைவாணராகவும் கொலைவாணராகவும் நடிப்பதை விடக் கலைவாணராக வாழ்வோம்.

அன்பன்
-த.கோவேந்தன்