பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்,

63


பட்ட முழுக்கடனையும் உங்களுக்கு நான் திரும்பவும் மறு பிறவியில் அடைக்க முடியும்” என்று விளக்கம் தந்தான். விளக்கம் கேட்டுச் சிந்தை குளிர்ந்தார் செல்வர்.


61. நினைவுக்கல்

வாணி என்னும் பெயர் கொண்ட செல்வச் சீமாட்டி ஒருத்தியிருந்தாள். அவளுக்கு ஓர் ஆசை. தான் மரித்ததும், தன் கல்லறையில் பொய்யாய்ச் சில புகழுறைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாள். அப்படிப்பட்ட புனைந்துரையைப் புனைந்துவர புலமையில் சிறந்த வித்தகன் ஒருவனிடம் வேண்டினாள். அவனும் எத்தனையோ தொடர்களை எழுதியெழுதிப் பார்த்து எவையும் பொருந்தாததால்