பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

69


வாக்குறுதி மொழிக்கு அஞ்சி அந்த அதிகாரி “நான் இந்தத் தட்டை உங்கள் முன் நீட்டுகிறேன். அதில் தங்கக் கட்டிகளை வைத்துவிடுங்கள். அதுமட்டுமில்லை பதவி ஏற்றபோது பணத்தை இலஞ்சமாகப் பெறுவதைக் குறித்துத் தான் வாக்களித்தேனேயன்றி தங்கக் கட்டிகளைப் பெறுவதைப் பற்றியன்று. அப்படியே ஏதேனும் ஒன்று அழுக வேண்டுமானால் தட்டு அழுகிப்போகட்டுமே. ஏனெனில் தட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பு கிடையாதே” என்றார்.

67. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

பணக்கார முதியவர் ஒருவர் வலுவற்ற மெலிந்த உடலோடும் முதுமைத் தோற்றத்துடனும் காணப்பட்டார். யாரேனும் அவர் உடலின் வலுவின்மை பற்றியும் முதுமைத் தோற்றம் பற்றியும் குறிப்பிட்டால் அவர் மீது வெறுப்புக் கொள்வார். மாறாக அவர் காளை போன்ற கட்டுடல்