பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

73


சொன்னான் “பல நூறு கற்களுப்பால் துறவி எழுப்பிய மந்திர ஒலி உங்கள் காதில் எப்படி விழுந்ததோ, அத்தனை பெரிய மாமேருமலை இத்தனைச் சிறிய தூசியா துறவியின் கண்ணில் எப்படிப் பட்டதோ அப்படியே தான். இந்த விருந்தினருக்கும் இத்தனைச் சிறிய தொண்டை அமைந்தது” என்றான். அதிர்ந்தான் முன்னவன். அகன்றான் அவ் இடத்தை விட்டு.

70. சீருடைகள் வழங்கப்பட்டன

விருந்தினர் ஒருவர் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். வீட்டு வேலைக்காரன் முன்னும் பின்னுமாக இரண்டு ஓடுகளை தன் இரண்டு மறைவிடங்களில் கட்டிக் கொண்டு, தேநீர் எடுத்து வந்தான். “விருந்தினர் முன்னிலையில் இப்படி கடினமான ஆடையை உடுத்தி வரலாமா?