பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


சென்று மெல்லிய ஆடை அணிந்து வா,” என்று சீற்றம் கொண்டார் முதலாளி. உள்ளே சென்ற வேலைக்காரன் ஓடுகளுக்கு மாற்றாகத் தாமரை இலைகள் இரண்டினை அவ் இடங்களில் உடுத்திச் சற்று நேரத்தில் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தால்... கவனித்துக் கொண்டிருந்த விருந்தினர், “வாழ்க்கை உங்கள் இல்லத்தில் மிகவும் கண்ணியக் குறைவாக உள்ளது” என்றார். செலவைக் குறைக்க இந்த நடவடிக்கையோ என்று மேலும் வினவினான். முதலாளி, “இல்லை இல்லை இது கண்ணியக் குறைவானது அல்ல” என்று மறுப்புத் தெரிவித்தார். “சான்றுக்கு உங்கள் வேலைக்காரனை எடுத்துக் கொள்ளலாமே” என்று சுட்டிக்காட்டினார் விருந்தினர். அவர் மேலும் சொன்னார், “அவனிடம் ஒரு தடித்த ஆடையும், மெல்லிய ஆடை ஒன்றுமே உள்ளன. இதைத் தவிர வேறு எந்த ஏற்பாடுகளும் நீங்கள் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. இவையெல்லாம் செலவை நினைத்தா? என்று. “முதல் முறையாக அவனை நான் தேர்வு செய்யும்போது, உணவுக்கு (சாப்பாட்டிற்கு) தன் வீட்டிற்குச் சென்றுவிடுவதாகவும், சீருடை மட்டும் நான் கொடுத்தால் போதும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளான். குறைந்தது இரண்டு வகை சீருடை வழங்கவில்லையெனில், ஒப்பந்தத்தின் கட்டளை நிறைவேற்றுவது கடினமாக இருக்குமல்லவா?” என்றான் வீட்டின் முதலாளி பெருமிதத்துடன்.


71. பிச்சைக்காரர்களும் நாய்களும்

“உன்னைக் கண்டதுமே நாய்கள் உன்னைக் கடிக்க வருகின்றதே ஏன்?” என்று ஒருவன் பிச்சைக்காரனிடம் கேட்டான். “ஏனெனில் ஆடையைப் பார்த்தே நாய்கள் மனி-