பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


அவன். “நாம் இருவரும் பிச்சைக்காரரர்களாய்ச் சந்தித்த அந்தக் கசப்பான நிகழ்ச்சியை நீங்கள் மறந்து வீட்டீர்களா? அன்றிரவு முழுவதும் கொட்டிய மழையில் ஒதுங்க இடமின்றி ஒரு மூங்கில் புதரில் நனைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தோம். அதைவிடவா இப்போது அதிகம் நனைந்துவிட்டீர்கள்? என்று கேட்டாளே ஒரு கேள்வி, அவன் மனத்தில்படும்படி.

3. ஒற்றை ஆடை அறிஞர்

அறிஞர் ஒருவர் உடுத்திக் கொள்ள ஆடை ஒன்றே ஒன்றினையே வைத்திருந்தார். அந்த ஆடையையும் துவைக்க நேர்ந்ததால், அம்மணமாகவே படுக்கையில் அவர் படுத்துக் கொள்வார். ஒருமுறை ஆடையை அவ்வாறே துவைத்து உலர வைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்று அம்மணமாய் படுத்துக் கொண்டார். அந்த நேரம் பார்த்து அறிஞரைக் காண ஒருவர் வந்தார். அறிஞரைக்கானது அவருடைய மகனிடம் “அப்பா எங்கே! என்றார். “படுக்கையில்” என்றான் மகன் “உடம்புக்கென்ன? நலக்கேடா?” வந்தவர் கேட்டார். “உடுக்க ஒன்றுமில்லை என்று படுக்கையில் படுத்துக் கொண்டால், நலக்கேடு என்றா பொருள்?” வந்தவரிடம் விளக்கம் கேட்டான் மகன்.

4. வறிய விருந்தினன்

வறியவன் ஒருவன், பணம் படைத்த உறவினர்கள் வீட்டில் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டான். விருந்திற்கு அணிந்து செல்ல அழகிய உயர்ந்த ஆடையில்லாததால் பஞ்சில் நெய்ந்த மெல்லிய ஆடையொன்றை அணிந்து