பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்,

85


பின்னர் அவர்கள் இருவரும் நண்பரிடம் விடை பெற்று வெளியே வாயலில் வந்தபோது, தம்பி அண்ணனிடம் சொன்னான் “முதலில் கொடுத்த முட்டாள்கள் மெல்லக் கடினமாயிருந்தன. ஆனால் அவைதாம் சுவையாயிருந்தன. இரண்டாவது கொடுத்த முட்டாள்களே நாவில் சுவைக்கவேயில்லை” என்று.

81. மதுக்கோப்பையை அறுத்தல்

அழைப்பிற்கிணங்கி விருந்தொன்றிற்குச் சென்றார் ஒருவர். விருந்துக்கழைத்த நண்பரோ ஒவ்வொரு முறையும் மதுக் கிண்ணத்தில் அரைக் கிண்ணம் அளவே மது ஊற்றிக் கொடுத்தார். விருந்தினரோ அவர் செயல் கண்டு வெறுப்புற்றார். அளவுக்கு மிஞ்சிய வெறுப்பில் அவர் கேட்டார். “உங்களிடம் வாள்(ரம்பம்) இருக்கின்றதா? இருந்தால் கொஞ்சநேரம். இரவல் கொடுங்களேன்” என்று கேட்டார்.