பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

87


தொடங்கினார். நீண்ட பலகை ஒன்றினில் நோயாளியைப் படுக்கச் செய்தார். வேறொரு நீண்ட பலகையை அவர் மீது வைத்தார். மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பலகைகளுக்கிடையே இப்போது நோயாளி படுத்திருந்தார். இரண்டு பலகைகளின் விளிம்புகளைக் கயிற்றால் கட்டி மெல்ல மெல்ல கட்டுகளை இறுக்கினார். பலகைகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்ந்து இடையில் கிடந்த மனிதனை நெருங்கின. பின்னர் நசுக்கின. வேதனை தாங்காது நோயாளி கட்டுகளை இறுக்குவதை நிறுத்தச் சொல்லிக் கதறினார். மருத்துவரோ அவர் கதறுதலைத் தம் காதில் போட்டுக் கொள்ளாமல் தம் வைத்தியத்தை தொடர்ந்தார். சற்று நேரத்தில் கதறல் நின்றது. தற்போது பல கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் பலகையை நீக்கினார். கூன் நேராக நிமிர்ந்திருந்தது. நோயாளியும் கூன் மட்டும் நிமிரவில்லை கை கால்கள் அனைத்துமே நீட்டி நிமிர்ந்த வண்ணம் மடக்க முடியாமல் இருந்தன. கூன் குணமானது. ஆனால் நோயாளி இறந்து போனான்.

உறவினர் கொதித்தனர். மருத்துவரை உதைத்தனர். உதைகளுக்கிடையே மருத்துவர் “நான் கூனை நிமித்துவதாகத்தான் சொன்னேன் அப்போது யாரும் என்னிடம் அவருடைய உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லையே” என்றார்.


84. அம்பினை அகற்றச் சென்றவன்
வம்பினில் அகப்பட்டான்

வீரன் ஒருவனின் உடம்பில் அம்பொன்று தைத்தது. ஆழமாகத் தைத்த அம்பினை அகற்ற மருத்துவரிடம் கொண்டு