பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


யிடம் “கொசுக்களுக்கு இரத்தக் கொடை செய்வதாக உறுதியெடுத்துக் கொண்ட நீங்கள் இப்படி அவைகளை அடித்து விரட்டலாமா?” என்று கேட்டார். “எனெனில் சில கொசுக்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன” என்றார் துறவி.

86. தெருப் பாடகன்

தெருவிலே ஒருவன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கினான். பலரும் அவன் மண்முழா தான் வாசிக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டு அவன் இசையைச் சுவைக்க அவனைச் சுற்றிக் குழுமினர். ஆனால் இசைக் கலைஞன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கியதும் இசையில் இனிமையில்லாததால் குழுமிய கூட்டம் கலைந்தது. ஒரே ஒருவர் மட்டும் அங்கு இறுதிவரை நின்று கொண்டிருந்தார். இறுதிவரை தன் அருகில் நின்று கொண்டிருந்த அந்த மனிதரைக் கண்டு ‘நம் இசையை சுவைக்க இவர் ஒருவர் இருக்கிறாரே. எனவே என் இசை அறிவு வீண்போகவில்லை’ என்று மகிழ்ந்து கூறினார் இசைக் கலைஞர். அதனைக் கேட்டு, அந்த மனிதன் “என் நிலைப்பலகையை மட்டும் நான் உங்களுக்கு மேடையாக தராவிட்டால் நானும் இங்கிருந்து எப்போதோ போயிருப்பேன்” என்று சொன்னார்.

87. திருடனின் மேலாடை
திருடப்பட்டது

மணத்துணைவர் (தம்பதிகள்) தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் புகுந்தான் திருடன். அவர்கள் வீட்டில் திருடுவதற்கு வேறெதுவும் இல்லாமல், ஒரே ஒரு