பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

91


பானையில் அரிசி நிரப்பப்பட்டு அவர்கள் படுக்கை அறையில் அது வைக்கப்பட்டிருந்ததால் அதனைத் திருட அங்குப் புகுந்தான் அந்தத் திருடன். பானையிலிருந்த அரிசியைத் திருடி, வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்துண்ண நினைத்தான் திருடன்.

ஆனால் அரிசியைக் கட்டி எடுத்துச் செல்ல அங்கு வேறெதுவும் இல்லாததால், தன் மேலாடையில் முழு அரிசியைக் கொட்டிக் கட்டி எடுத்துச் செல்ல நினைத்துத், தன் மேலாடையைக் கழற்றித் தரையில் விரித்தான். பின் பானையின் பக்கம் திரும்பி அதனைத் தூக்க முனைந்த போது, விழிந்துக் கொண்ட கணவன் தன்கையை நீட்டி திருடனின் மேலாடையை மெதுவாய் எடுத்துத் தன் படுக்கையின் அடியில் மறைத்து வைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். பானையைத் தூக்கி அதிலிருந்த அரிசியை மேலாடையில் கொட்ட வந்த திருடன் தான் ஆடையை விரித்திருந்த இடத்தில் காணமல் திடுக்கிட்டுத் திகைத்தான். அந்த நேரம் பார்த்து மனைவி விழித்துக் கொண்டாள். கணவனை எழுப்பி ஏதோ ஓர் உருவம் அறையினுள் நடமாடுவதை அவனுக்கு உணர்த்தினாள். கணவன் “நான் நீண்ட நேரமாக விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இங்குத் திருடன் யாரும் இங்கு இல்லை” என்றான். ‘என்ன?’ திருடன் கூவினான். ‘என் மேலாடை இங்கு திருடு போய்விட்டது. திருடன் யாரும் இங்கு இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம்? என்றான் அந்த உண்மைத் திருடன்.


88. உப்பிட்ட முட்டைகள்

ஒரு நாள் உப்பிட்ட முட்டைகளை இருவர் தின்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் “பொதுவாக