பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

93


பாட முடியாமல் திரும்பி விட்டேன்” என்றான் வேலைக்காரன்.


90. குளிர் நீர் ஊற்று

“என் உள்ளம் குளிர்ந்தது” என்று தன் மனைவியிடம் கூறினான் ஒரு மனிதன். "நீங்கள் சொல்லுவதின் பொருள் என்ன?” என்று புரியாது வினவினாள் மனைவி. இப்போது தான் நான் குளிர்நீர் ஊற்றில் என் உள்ளத்தைக் கழுவினேன். எனவே என் உள்ளம் குளிராவிட்டால் அந்த நீர் ஊற்றுக்கு அதன் பெயர் பொருந்தாது போய்விடுமே” என்று தன் மனைவிக்குப் பொருள் புரியும்படி அருள்புரிந்தான் அந்தக் கணவன்.

91. கனவில் கண்ட காரிகை

இளைஞன் ஒருவன் இரவில் கனவொன்று கண்டான். காலையில் எழுந்ததும் பணிப் பெண்ணை அழைத்தான். “நேற்றிரவு என்னை நீ கனவில் கண்டாயா?” ‘இல்லை’ என்றாள். வேறெதுவும் அவள் சொல்லவில்லை.

சீற்றமுற்றான் இளைஞன். “நான் என் கனவில் உன்னைக் கண்டேன் என்பது முற்றிலும் உண்மை? அப்படியாயின் நீ மட்டும் என்னைக் காணவில்லை என்று எப்படிப் பொய் சொல்லலாம்’ என்று சொல்லிய வண்ணம் அம்மாவின் அறைக்குச் சென்று அம்மாவிடம் “அம்மா, உன்றன் பணிப்பெண் தண்டனைக்குரியவள். நேற்றிரவு அவளை நான் கனவில் கண்டு காதல் கொண்டேன். ஆனால்