பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


வேண்டா” என்றான் மிகப் பணிவோடு. அத்தனை அச்சம் அந்த மனிதனுக்கு அவனின் எழுத்தின் மீது.


94. குடிக்கத் துடிக்கும் மனம்

மது வெறி கொண்ட ஆசிரியர் ஒருவர் மற்றொரு வெறி மது விரும்பும் வெறியன் ஒருவனை வேலைக்கமர்த்தினான். அந்த மதுவெறியன் வைத்திருந்த மதுவினில் பெரும் பகுதியை வேலைக்காரனே குடித்துத் தீர்த்தான். எனவே அந்த ஆசிரியர் வேலைக்காரனையே அதன்பின் அமர்த்தவில்லை. அப்படியே ஒருவேளை வேலைக்கு அமர்த்தினாலும், மதுவைப் பற்றி சிறிதும் அறியாத சிறுவனையே அமர்த்த வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டார்.