பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்,

97



ஒரு நாள் ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஒரு சிறுவனை அழைத்து வந்து அவனை வேலைக்காரனாக அமர்த்திக் கொள்ளும்படி பரிந்துரை செய்தார். ஆசிரியர் அச் சிறுவனிடம் மஞ்சள் நிறமான அரிசி மதுப்பாட்டிலைக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். சிறுவன் அம் மதுவின் பெயரைச் சரியாய் சொன்னான். மதுவின் பெயர்களை அறிந்து வைத்திருக்கும் இச் சிறுவன் அவற்றின் சுவைகளையும் அறிந்திருப்பான் என்று எண்ணி அவனை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்தார். பின்னர் வேறு ஒரு சிறுவனை வேறு ஒரு நண்பர் வேலைக்குப் பரிந்துரைத்தார். அவனிடம் மிக உயர்வகை மதுவினைக் காட்டி அதன் பெயர் கேட்டார். அச் சிறுவனோ அதன் பெயரைத் தப்பாது செப்பினான். உறுதி, இவன் பெருங்குடிக்காரனாய் இருக்க வேண்டும் என நினைத்து அவனையும் புறக்கணித்தார்.

எதிர்பாராத வகையில் மூன்றாவது ஒரு சிறுவன் பரிந்துரைக்கப்பட்டான். இம்முறை இச் சிறுவன் வெள்ளை நிறமதுவிற்கும் மஞ்சள் நிற மதுவிற்கும் வேறுபாடு தெரியாமல் திகைத்தான். அவன் மதுவினைப் பற்றி ஒன்றும் அறியாதவன் எனக் கணித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

ஒருநாள் ஆசிரியர் வீட்டை வேலைக்காரனிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் சென்றார். அப்படி அவர் செல்லும்போது வேலைக்காரனிடம், “சமையல் அறையின் சுவரில் ஒரு பன்றியின் தொடை தொங்கிக் கொண்டிருக்கிறது. முற்றத்தில் கோழி மேய்ந்து கொண்டிருக்கிறது. எனக்காக அவற்றைப் பாதுகாத்துக்கொள். உள் அறையில் வெள்ளை மது நிரம்பிய குடுவை ஒன்றும், சிவப்பு மது நிறைந்த ஒரு குடுவையும் வைத்துள்ளேன். அவற்றைத் தொட்டுக்கூட பார்க்காதே. யாராவது அதனை அருந்தினால்