பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 94

அவர்கள் பணித்தபடியே இவர் ஒரு பாட்டுப் பாடினார். பிறகு சந்திதானத்தைப் பார்த்தபொழுது இவர் அண்தச் சொன்னார். அது வருமாறு:

ஈசன் திருவா வடுதுறை யின்கண் எழுத்தருளும் தேசர், வயித்திய விங்கத்

திருப்பெயர்த் தேசிகனார் ஆசிரி யப்பெரு மானுடன் உண்ண

அளித்தருளும் கேசரி உண்டிட தால்வாய்

எமக்குக் கிடைத்திலவே.

சிவபெருமான் கோயில் கொண்டருளிய திருவாவடுதுறை என்னும் தலத்தின்கண் எழுந்தருளி யுள்ள தேசு மிக்கவர், வயித்திய லிங்கம் என்னும் தெய்விகத் திருநாமத்தையுடைய தேசிகர், என்னுடைய ஆசிரியப் பிரானுடன் உண்ணுவதற்கு வழங்கிய கேசரி என்னும் சிற்றுண்டியை உண்ண நான்கு வாய்கள் எமக்குக் கிடைக்கவில்லையே!.

இறுதி அடியில், சிங்கம் உண்பதற்கு யானை கிடைக்கவில்லையே' என்ற பொருள் தொனியில் அமைந்தது.

கேசரி - சிங்கம், நால்வாய் - யானை.

கனியும் காயும்

பல ஆண்டுகளுக்கு முன் கி.வா.ஜ. முதல் முறையாகக் கோபிசெட்டிபாளையத்துக்குச் சென்று ஒரு வாரம் தங்கிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அந்த ஊருக்கு