பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

குலனுடை யான் கண்ணே உள" என்று திருவள்ளுவர் கூறுகிறார். நல்லொழுக்கமும் குடிப்பிறப்பும் உடையவ னிடம், பிறர் ஒருவர்பால் சென்று நான் ஒன்றும் இல்லாதவன் என்று சொல்லி இரவாமல் இருப்பதும், எல்லாருக்கும் கொடுப்பதும் ஆகிய செயல்கள் உள்ளனவாகும் என்பது பொருள். முத்து வேலப்பக் கவுண்டர் எந்தச் சமயத்திலும் யாரிடத்திலும் ஈ என்று கேட்கமாட்டார். எவர் வந்து எதைக் கேட்டாலும் இலை என்று சொல்லமாட்டார். இப்படி ஈ என்றும் இலை என்றும் சொல்லாதவராகிய கவுண்டர், இப்போது ஈ இலையில் மொய்த்தவுடன் ஈ, இலை என்று சொல்லிவிட்டார். இவ்வாறு சொல்லி அந்தக் கருத்தை ஒரு பாடலில் இணைத்துச் சொன்னார்.

பாவம் துடைக்கின்ற பாரியூர்க் காளி

பதமலர்க்கே - ஆவ லுடன்அன்பு செய்முத்து வேலப்பன்

அன்றொடின்றும் சீவன் துறக்கினும் ஈ. என் றிலைஎன்று

செப்பறியான் ஈவந் திலையில் இருத்தலும், ஈஇலை

என்றனனே. -

ஆலமும் பனையும்

பாரியூர்க் காளி கோயிலுக்கு எதிரில் வாய்க்கால் ஒடுகிறது. நீர்வளம், நீலவளம் நிறைந்த பகுதி அது. கோயிலுக்கு முன்னே ஓர் அழகான ஆலமரம். அதன் நடுவில் நட்டு வைத்தாற்போல் ஒரு பனைமரம் முளைத்திருந்தது. சுற்றிலும் ஆலமரக் கிளைகள் ஒழுங்காக விரிந்து , நிற்க, நட்ட நடுவில் அந்தப் பனைமரம் காட்சி அளித்தது.

காளி கோயிலுக்கு அருகில் சிவபெருமான் கோயில் இருக்கிறது. அங்குள்ள பெருமானுக்கு அமர விடங்கர்