99 - சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
தங்கியிருந்தார். சத்தியாக்கிரக வீரரும் தேசத் தொண்டருமாகிய திரு. ஜி.எஸ். லக்ஷ்மணன் இவருக்கு வேண்டிய உபகாரம் செய்தார். அன்று இவர் முடி திருத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சின்னான் என்ற முடி வினைஞன் வந்து ஏற்பன செய்தான். அவனுக்கு இவர் கூலி கொடுக்கப் போனபோது அவன் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றான். உடனே, "அப்படியானால் நான் ஒரு பாட்டுத் தருகிறேன். வாங்கிக்கொள்" என்று ஒரு வெண்பா பாடினார். 'சின்னான் என்னும் வீரன் கையில் கத்தி எடுத்தான். நான் அஞ்சி நடுங்கி இன்னது செய்தேன்’ என்று தொனிக்கும் வகையில் அந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
தலைவணங்கி வாய்மூடித் தாடையினைக் காட்டி அலைகுடுமி கையில் அளித்தேன் - கலைவளங்கள் மெத்தவளர் கோபிநகர் வீறுசின்னான் தன் கையில் கத்தி யினை எடுக்கக் கண்டு. -
கத்தி எடுப்பவன்
இவருடைய நண்பர்களுள் ஒருவராகிய திரு.கி.ரங்கராஜன் கு ம் ப ேகா ண த் தி லி ரு ந் து சென்னைக்கு வந்து இவர் வீட்டில் தங்கினார். (அவர் அமரராகி விட்டார். ஒரு நாள் ஒரு சிறிய கல்யாணம் விசாரிக்க இவர் போனபோது ரங்கராஜனுடன் சென்றார்.
அங்கே காலையில் - மாப்பிள்ளைக்கு ஒரு முடி வினைஞன் முடி களைந்தான். மாப்பிள்ளை நீராடிப் புத்தாடை புனைந்து மனையில் அமர்ந்தார். அப்போது