பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 100

அந்த முடி திருத்துவோன் தன் கையில் நாகசுரம் எடுத்து ஊதத் தொடங்கினான். சென்னையில் இந்தக் காட்சி அரிதன்று. ஆனால் நண்பருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அவர் சோழநாட்டுக்காரர் அல்லவா? சின்னக் கல்யாணமாகையால் அவனுடைய வாத்தியமே போதும் என்று வைத்திருந்தார்கள். -

ரங்கராஜன் இவரிடம், இது என்ன பொருத்தம் இல்லாமல் இருக்கிறதே என்றார். இந்த பக்கத்தில் இது வழக்கந்தான். இவன் இரண்டு சமயத்திலும் ஒரு காரியந்தானே செய்கிறான்?" என்றார் இவர். "அது எப்படி?" என்று கேட்டார் நண்பர். இவர் ஒரு வெண்பாவில் விடை சொன்னார்.

சென்னை நகரில் சிறந்தகலி யாணத்தில்

முன்னே சவரம் முயன்று செய்தான்; பின் அவனே

உத்தியின்றி நாயனத்தை ஊதினான்;சரிடத்தும்

கத்தி எடுப்பவனே காண்.

கத்தி எடுப்பவன் - சவரம் செய்யக் கத்தியை எடுப்பவன்; இசையைப் பாடாமல் வெறும் கத்தலாகக் கத்துகிறவன்.

சீதா.கல்யாண மண்டபம்

கோபிசெட்டிபாளையத்தில் திரு. தங்கமணி முத்து வேலப்பக் கவுண்டர் என்னும் வள்ளல் சீதா கல்யாண மண்டபம் என்ற பெயரில் பெரிய கல்யாண மண்டபம் ஒன்று கட்டியிருக்கிறார். ஒரே சமயத்தில் ஆறு கல்யாணங்கள் நடப்பதற்கு வேண்டிய வசதிகள் அங்கே உள்ளன. கட்டணம் இல்லாமல் வழங்குகிறார். அதைப் பாராட்டிப் பாடல் சொல்ல வேண்டுமென்று