101 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
திரு. ஜே. சுப்பிரமணிய ஐயர் இவரைக் கேட்டுக் கொண்டார். "தம் பெயரைச் சொன்னாலே தங்கம் மணி முத்து எல்லாம் வரும் வேலப்பக் கவுண்டர் இதை அமைத்தது வியப்போ?" என்ற கருத்தை வைத்து இவர் உடனே பாடிய பாட்டு: -
கொல்யானை வேந்தர்க்கும்
கூடா தெனச்சீதா கல்யாண மண்டபத்தைக்
கட்டுவித்தான் - சொல்வியப்போ தங்கமணி முத்துப்பேர்
சாற்றவரும் வேலப்பன் இங்கிதனைச் செய்தான் எனல்.
மற்றொரு பாட்டு:
தங்கமணி யார்செய்சீ
தாகலி யாணமண்ட பங்கண்டார் கோபியினரில்
பண்டைநாள் - பொங்கு நகர் மாமிதிலைச் சீதா
மணமண் டபமிதுவே ஆமென்று நின்றுவியப் பார்.
பல நோய்கள்
இளமையிலேயே செய்யுள் இயற்றும் திறமை பெற்றார். இவர். இவருடைய் ஊராகிய மோகனூரில் சிவன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண் டிருந்தது. இவர் அங்கே போயிருந்தார். ஒரு வைணவப் பெரியவரும் அங்கே வந்திருந்தார், இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். காளமேகத்தைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது இவர் காளமேகத்தின் பாடல் ஒன்றைச் சொன்னார்.