சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 103
புள்ளிருக்கு வேளூராகிய வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் தீராத வினை தீர்த்த தம்பிரான் என்று பெயர். அவரைப் பற்றி நிந்தாஸ்துதியாகக் காளமேகம் பாடியிருக்கிறார். 'தமக்கும் தம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வந்த நோயைத் தீர்க்கத் தெரியாத இவர் எந்த வினை தீர்க்கப் போகிறார்?' என்ற கருத்துடையது அந்தப் பாட்டு.
வாதக்கா லாம்தமக்கு: மைத்துனர்க்கு நீரிழிவாம்: போதப் பெருவயிறாம் புத்திரருக்கு; ஒதக்கேள்; வந்தவினை தீர்க்க வகையறியா வேளுரார் எந்தவினை தீர்ப்பார் இவர் ? வாதக்கால் . வாயுப் பிடிப்புள்ள கால், காளியோடு நடனவாதம் செய்த கால். மைத்துனர்க்கு - திருமாலுக்கு நீரிழிவு - நீரிழிவு என்னும் நோய், கடலில் இறங்கி யிருக்கும் நிலை; இங்கே பாற்கடலைச் சுட்டியபடி. பெருவயிறு - மகோதரம் என்ற நோய், பெரிய வயிறு. புத்திரருக்கு - கணபதிக்கு.
இந்தப் பாட்டை இவர் சொன்னபோது கேட்ட அந்த வைணவர், "எங்கள் பெருமாளுக்கு இப்படி ஒன்றும் இல்லை என்றார். இதோ நான் பாடுகிறேன்: இந்தப் பாட்டில் குடும்பத்தையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. நான் பெருமாளுக்கே உள்ள நோய்களைச் சொல்கிறேன்" என்று கூறி ஒரு வெண்பாவைச் சொன்னார்.
நீரிழிவு தான் உள்ளான்; நீடுகழ லைஉடையான்; சீரிலகு மார்பினிடைச் சீக்கொண்டான், - ஒரின் வலிப்புவிக்கு ளேபொருந்தி மாலானான் தானோ
நிலைப்புறுநோய் தீர்ப்பான் நினைத்து?