பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வாஜ 4

விட்டார்கள்; மூன்றாவது கரண்டியும் விட்டு விட்டார்கள்; இவருக்குத் திணறியது. மேலும் விட வந்தார்கள். இவரால் பொறுக்க முடியவில்லை, "பாய்சன் தான் கொல்லும்; பாயசமும் கொல்லுமோ?" என்று கேட்டார்; உடனே நிறுத்தி விட்டார்கள்.

(பாய்சன் Poison - விஷம்)

குமரன் அகத்தியர் ஆனான்

தூத்துக்குடியில் இவர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது திருநெல்வேலியிலிருந்து சில அன்பர்கள் இவரைக் காண வந்தார்கள். பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது சிவராமகிருஷ்ணனுடைய இரண்டாம் பிள்ளை குமார் எதையோ தின்று கொண்டிருந்தான். வந்த அன்பர்களில் ஒருவர், "என்ன தம்பி தின்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு இவர், "அகத்தியர் ஆகிக் கொண்டிருக்கிறான்" என்றார். " என்ன?" என்று கேட்ட அன்பருக்கு விளக்கம் வந்தது; "அகத்தியர் கடலை உண்டார்; இவனும் கடலை உண்கிறான்."

(கடலை - கடலினை, கடலையை)

முதல் தரம்

ஒரு கூட்டத்தில் இவர் தலைமை தாங்கினார். அந்தச் சபையில் ஒர் அன்பர் பேசினார். அவர் பேசி முடிந்தவுடன் இவர் அவரைப் பார்த்து, "நீங்கள் இந்தச் சபைக்கு வந்ததுண்டோ?"