103 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
நீரிழிவு - ஒரு நோய், கடலில் இறங்கி வாழ்தல். நீடு கழலை உடையான் - நெடு நாட்களாக உள்ள கட்டியை உடையவன், உலகத்தை அளப்பதற்காக நீண்ட திருவடியை உடையவன். சீக் கொண்டான் - சீழைக் கொண்டான், திருமகளைக் கொண்டான்; சீ-திருமகள். வலிப்பு விக்குளே பொருந்தி மால் ஆனான் - வலிப்பும் விக்கலும் சேர்ந்து மயக்கம் உடையவனானான்; வலிப்புவிக்குளே பொருந்தி மால் ஆனான் - வன்மை யையுடைய பூமிதேவியினிடத்தில் மனம் பொருந்திக் காதலுடையவன் ஆனான்.
வேட்டியிடை வித்தகன்
திருவல்லிக்கேணியில் திருவேட்டீசுவரன் பேட்டை என்ற பகுதி இருக்கிறது. அங்கே திருவேட்டீசுவரன் கோயில் என்ற சிவாலயம் இருக்கிறது. சிவலிங்கத்தில் வெட்டுக் குறி இருக்கிறது. அருச்சுனன் அடித்த வில் தழும்பை நினைப்பூட்டுவது அது. சிவபெருமான் வேடுவன்ாக எழுந்தருளி அருச்சுனனோடு போராடிய போது அவன் அடித்தான். வேடுவ வடிவத்தில் வந்து அடிபட்டவன் என்பதை எண்ணி வேட்டீசுவரன் என்ற திருநாமம் வழங்குகிறது. வேடு-வேடன். இத்தகைய விங்கத்தைப் பார்த்தப்பிரகர லிங்கம் என்பார்கள். "தீக்காலி வல்லந்திருவேட்டியும்" என்று அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற வேட்டி என்ற வைப்புத்தலம் இது. திருவேட்டீசுவரன் பேட்டையில்
பிள்ளையார் கோயில் தெருவில் தியாகராஜ விலாசத்தில்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் மகா மகோபாத்தியாய ஐயரவர்கள் வாழ்ந்தார்கள்.
அவர்களிடம் மாணாக்கராக இருந்து கி.வா.ஜ.பாடம் கேட்ட காலத்தில் ஐயரவர்கள் அடிக்கடி சமஸ்யை கொடுத்து இவரைப் பாடச் சொல்வார்கள். அப்படி