பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கிவாஜ 106

காபிக்கு: கைப்பு இசைய நல்லதாய் - கசப்புப் பொருந்த நல்லதாகி. பால் அருந்தி வேண்டாத பான்மையால் - பாலை அருந்துபவனாகிய நான் வேண்டாத இயல்பினால், பழையதுக்கு : கை பிசைய நல்லதாய் - கையினால் பிசைதலால் நலமுடையதாகி. பாலர் உந்தி வேண்டாத பான்மையால் - இளம் பிள்ளைகள் தள்ளி விட்டு வேண்டாத இயல்பினால்,

ஆனைக்கும் பானைக்கும்

வேறு ஒரு நண்பர் ஆனைக்கும் பானைக்கும் சிலேடை சொல்லச் சொன்னார்.

கரியாத லால்அடும் காரியத்தைச் செய்யும் உரிமையா லேஉடைத் தோடா - விரிதலால் அங்குசவன் செய்கைக் கடங்கலால் பானையினைப் பொங்குமத யானையெனப் போற்று.

பானைக்கு: கரி ஆதலால் - அடுப்பில் ஏற்றிக் கரியாவதால். அடும் காரியத்தை - சோறு சமைக்கும் செயலை உடைந்து ஒடா விரிதலால் - உடைந்து பானையென்னும் பெயர் போய் ஒடாக விரிந்து விடுவதால், அம் குசவன் செய்கைக்கு அடங்கலால்அழகிய குயவனுடைய தொழிலுக்கு அடங்குவதனால். யானைக்கு: கரி ஆதலால் கரி என்று பெயர் உடையதாதலால். அடும் காரியத்தை - போர்களத்தில் பகைவர்களைக் கொல்லும் செயலை உடைந்து ஒடா இரிதலால் - சில சமயங்களில் தோற்றுப் போய் ஒடி நீங்குவதால். அங்குசவன் செய்கைக்கு அடங்கலால் - அங்குசத்தின் வன்மையான செய்கைக்கு அடங்கி நிற்பதால்.