பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 110

தன்னுடைய அழகு முதலியவற்றுக்கு ஏற்றபடி நாடுகின்ற கணவனைத் தான் அடைதலால். மிக்க கவின் ஏரால் வளம் பெறலால்-மிகுதியான அழகும் எழுச்சியும் பெற்று அவற்றால் பெண்மையென்னும் சிறப்பை அடைதலால் (கவின் அழகு, ஏர்- எழுச்சி). எழு பருவம் சேர்தலால்பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களைச் சேர்வதனால்.

கடிகாரத்துக்கும் ரெயில் வண்டிக்கும்

சாவி கொடுத்தலால் காலம் தவறாமல் போவதன்ால் எண்கள் பொருந்துதலால்- மேவும்

மணியடித்தே ஒடுதலால் வாய்ந்தசக்க ரத்தால் அணிகடிகா ரம்ரெயிலே ஆம்.

கடிகாரத்துக்கு : சாவி கொடுத்தல்ால்...

போவதனால்-வெளிப்படை எண்கள் - மணியைக்

குறிக்கும் இலக்கங்கள். சக்கரம் - உள்ளே உள்ள

சக்கரங்கள்.

ரெயில் வண்டிக்கு : சாவி கொடுத்தலால்

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சாவி கொடுப்பதனால்.

எண்கள்-வகுப்பைக் குறிக்கும் 1, 11 என்னும் எண்கள்.

சக்கரம்-கீழே உள்ள சக்கரங்கள்.

வெண்ணெய்க்கும் கண்ணாம்புக்கும்

அடைமேல் தடவி அயிறலால் வெள்ளை யுடைய நிறம் கொண்டுசட்டி உற்றிடலால் -அடைகின்ற மஞ்சளை வண்ணமாற் றுய்த்துச்செவ் வாயுறலால் அஞ்கண்ணாம் பும்வெண்ணெய் ஆம்.

கண்ணாம்புக்கு : அடை மேல் தடவி அயிறலால்வெற்றிலையின்மேல் தடவி உண்ணுவதால். வெள்ளை