பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

உடை நிறம் கொண்டு - வெள்ளையாகிய தன்னுடைய நிறத்தை மேற்கொண்டு. சட்டி உற்றிடலால்சுண்ணாம்புச் சட்டியில் இருப்பதால். அடைகின்றதான் சேருகின்ற. மஞ்சளை - மஞ்சட் பொடியை. வண்ணம் மாற்று உய்த்து - நிறத்தில் மாற்றத்தைச் செலுத்தி. செவ்வாய் உறலால் - செவ்வண்ணமாய் அமைவதால்.

வெண்ணெய்க்கு : அடைமேல் தடவி அயிறலால்அடையென்னும் சிற்றுண்டியின் மேலே தடவி உண்ணுவதால். வெள்ளை உடை நிறம் கொண்டுவெண்மையாகிய தன் நிறத்தைப் பெற்று. சட்டி உற்றிடலால் - தாழியில் இருப்பதால், அடைகின்றஅன்பர்கள் புகலடைகின்ற, மஞ்சு அளை வண்ணம் மால்-மேகத்தைப் போன்ற வண்ணத்தையுடைய கண்ணன். துய்த்து உண்டு. செவ்வாய் உறலால் - அவன் சிவந்த வாயில் சேர்தலால். -

மாலைக்கும் சாலைக்கும்

கானடைகார் வண்டி வருதலால் காணுந்தா ரானதுமேல் என்னலால் ஆலமது -தானு றலால் வாகை யிருபுறமும் வாய்த்தலால் மாலையினை ஏகுகின்ற சாலையாய் எண்.

மாலைக்கு : கான் அடை - மணத்தை அடைகின்ற. கார்வண்டு இவருதலால் - கரிய வண்டுகள் மொய்ப்பதனால், காணும் தார் ஆனது. மேல் என்னலால் - காண்பதற்கு அழகாகிய தாரானது, இது மேலானது என்று சிறப்பித்தலால் ஆவ - அசைய. மது தான் உறலால் - தேன் இருத்தலால். வாகைஅணிந்தவர் தோளை (வாகு-தோள்). இருபுறமும் வாய்த்தலால் - இரண்டு பக்கத்திலும் பொருந்துதலால்.