சிரிக்க வைக்கிற்ார் கி.வா.ஜ 113
சாலைக்கு : கால் நடை கார் வண்டி வருதலால் - ஆடு மாடுகளாகிய கால்நடைகளும் கார்களும் பிற வண்டிகளும் வருவதனால். காணும் தார் மேல் என்னலால் - இதன் மேல் தார் தோன்றும் என்று சொல்வதனால் (தார் - நிலக்கரி தார், Tar). ஆலம் அதுதான் உறலால் - அருகில் ஆலமரம் இருப்பதால். வாகை இருபுறமும் வாய்த்தலால் - வாகை மரங்கள் இரண்டு பக்கங்களிலும் பொருந்தி வளர்தலால் (சாலையோரத்தில் ஆலமரங்களும் வாகை மரங்களும் இருக்கும்).
தேனுக்கும் மீனுக்கும்
பூமிசைத்து வண்டு பொருந்துதல் சைவர்கள் தாமிசைந்தே ஆரா தனைத்தகையின் --நீர்மையுறல் ஆமடையிற் சேரல் அவண்துள்ளி ஏய்தல்இவை தாமுறலால் தேன்.மீனாச் சாற்று.
தேனுக்கு : பூ மிசைத்து வண்டு பொருந்துதல் - பூவின் மேலே உள்ளதாகிய வண்டு பொருந்துவது. சைவர்கள் தாம் இசைந்தே ஆராதனைத் தகையின் நீர்மையுறல்--சைவர்கள் தாம் ம்னம் உவந்து பூசை செய்யும் தகுதியாகிய சிறப்பை அடைதல். ஆம் அடையிற் சேரல்- மரத்தின்மேல் ஆகும் தேனடையில் சேர்தல். அவண் துள்ளி ஏய்தல் - அங்கே துளியாகப் பொருந்துதல். . .
மீனுக்கு : பூமிசை துவண்டு பொருந்துதல் - நிலத்தின் மேல் போட்டால் துவண்டு சேர்தல். சைவர்கள்தாம் மிசைந்தே ஆராது அனைத்தகையின் நீர்மையுறல் - சைவர்கள் உண்டு நிரம்பாது அந்த இயல்பாகிய பண்பை அடைதல். ஆம் மடையில் சேரல்வயலுக்குப் பாயும் மடையிலே சேர்தல். அவண் துள்ளி ஏய்தல் - அங்கே துள்ளிப் பொருந்துதல்.