113 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
- வில்லுக்கும் நெல்லுக்கும்
அம்பு விட முற்றும் வளைந்து களத்துறும் நம்பு பெரு வீரத்தை நண்ணுறம் - பம்புகின்ற வைக்கோலை ஏற்றதனைப் போரில் வயக்கும்.அந்தக் தக்கோர்வில் நெல்லெனவே சாற்று.
வில்லுக்கு : அம்பு விட முற்றும் வளைந்து - அம்பு விடும் பொருட்டு முழுவதும் வளைந்து. களத்துறும் - போர்க் களத்தை அடையும். நம்பு பெரு வீரத்தை நண்ணுறும் - விரும்புகின்ற பெரிய வீரத்தைப் பொருந்தும். பம்புகின்ற வை கோலை ஏற்று - பரவுகின்ற கூரிய அம்பைத் தாங்கி, அதனை - போரில் வயக்கும்.அதைப் போரிலே எய்து விளங்கச் செய்யும்.
நெல்லுக்கு : அம்பு விட முற்றும் - தண்ணிர் பாய்ச்சுவதால் முதிர்ச்சியை அடையும். வளைந்து களத்துறும் - கதிர் முற்றி வளைந்து பிறகு களத்துமேட்டை அடையும். நம்பு பெரு ஈரத்தை நண்ணுறும் - விரும்புகின்ற மிக்க ஈரத்தை அடையும். பம்புகின்ற வைக்கோலை ஏற்று - பரப்புகின்ற வைக்கோலைப் பெற்று. அதனை போரில் வயக்கும் - அதைப் போரிலே சேர்ந்து விளங்கச் செய்யும்.
வேலுக்கும் நூலுக்கும்
கூர்மை யுறும்கதிராற்
கோல முறும்தைக்கும் ஏர்மிகுந்த வெண்மை
இயைந்திருக்கும் - நேர்நிரையாம் பாவூடு சேர்த்துக்
கலைத்தொழிலார் பாங்கிசைப்பார் தாவு சுடர் வேல் நூலாச் சாற்று.
வேலுக்கு : கூர்மை உறும் - கூரிய தன்மையைப் பெறும். கதிரால் கோலம் உறும் - கிரணங்களால்