115 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
சொல்லும் பெருமையினால். பொடி வெண்மை ஏய்வுறலால் - திருநீற்றினால் வெண்ணிறத்தைப் பெறுதலால். போட்ட இலை மேல் உறலால் - அன்பர்கள் அருச்சித்த பத்திரங்கள் தன்மேல் இருப்பதனால். சாம் பாரின்மேவி - மக்கள் இறந்துபடும் நிலவுலகத்தில் எழுந்தருளி. இன்பம் தந்திடலால் - அன்பர்களுக்கு இன்பத்தை வழங்குவதால். கோலும் அரன் - அலங்காரம் செய்யும் சிவபெரும்ான்.
இட்டிலிக்கு : ஆட்டியபின் - மாவை ஆட்டிய பிறகு. ஆவியிலே பக்குவம் கண்டு அங்கு எடுக்கும் ஈட்டால்ஆவியிலே வேக வைத்து வெந்த பக்குவத்தை அறிந்து அப்போது எடுக்கும் ஈட்டால் (இட்டிலியை ஒருமுறை எடுத்தால் ஒர் ஈடு என்று சொல்வது வழக்கம்). பொடி
வெண்மை ஏய்வுறலால் - மிளகாய்ப் பொடியையும் வெள்ளை நிறத்தையும் அடைதலால், போட்ட இலைமேல் உறலால் - உண்ணுவதற்காகப் போட்ட
இலையின்மேல் இருத்தலால். சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால் - சாம்பாரிலே சேர்ந்து இனிய சுவையாகிய இன்பத்தைத் தருவதால்.
இந்தப் பாடலை அன்பர் திரு. ந. ரா. முருகவேளுடன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது (21.4.62 பாடியது. - . . .