பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இவ்வாறு சொல்வதை அறத்தொடு நிற்றல் என்பார்கள். வெறிவிலக்கும் முகத்தால் அறத்தொடு நிற்றல் என்பர். அறத்தொடு நிற்றல் - உண்மையைச் சார்ந்து நிற்றல்; உண்மையைக் கூறுதல். இவை யாவும் தோழி கூற்று.

பின்கண்ட செய்யுட்கள் அவ்வப்போது பாடியவை., ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றடியில் தொனி நயம் இருக்கும். - -

இம்மை - அம்மை

நம்மைப் பணிகொண்டு வேட்டிச்

சுரத்தமர் நாதர்வினை வெம்மைக் கொருமருந் தானவர்

தம்சீர் விளம்பலர்போல் கம்மைப் படவெறி யாடின் இக்

காமத் துயர்படும்என் றிம்மைக்குக் கேடுகுழ்ந் தாள்.அம்மைக்

கென்கொல் இயம்புவதே. - வேட்டீச்சுரம் - திருவேட்டீசுவரர் கோயில். வினை வெம்மைக்கு - வினைகளால் உண்டான தாபங்களுக்கு. விளம்பலர் போல் - சொல்லாத அஞ்ஞானிகளைப் போல. சும்மைப்பட - ஆரவாரம் உண்டாக வெறி ஆடின் - வெறியாட்டு எடுத்தால். இக் காமத்துயர் படும் என்று - தலைவி கொண்ட இந்தக் காமமாகிய துயரம் போகும் என்று எண்ணி. இமைக்கு - இந்த ஆட்டுக்கு. கேடு சூழ்ந்தாள் - அழிவைத் தேடினாள். அம்மைக்குஅத்தகைய தாய்க்கு. மை - ஆடு.

ஈற்றடி, இகலோக வாழ்க்கைக்கு அழிவைத் தேடினாள்; பரலோக வாழ்க்கைக்கு என்ன் கிடைக்கும் என்று சொல்வது?’ என்று மற்றொரு பொருள் தொனிக்க நின்றது. இம்மை - இகவாழ்வு, மறுமை - மறு உலக வாழ்வு. -