சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 130
ஆடு அடு
வீடுதத் தாளும் முருகேசன் காந்த விலங்கலிலே
காடுதந் தாரும் குழலுடை யாளுக்குக் காதல் இயல்
போடுதந் தானை அறிகிலள்
தாய்; வெறி யுற்றெடுத்தாள்;
ஆடு தலைக்குறைத் தேஅடு
என்றாைள்; ஆவதென்னே ?
காந்த விலங்கவில் - காந்த மலையில். காடு தந்து ஆரும் குழல் உடையாளுக்கு - காட்டின் தோற்றத்தைத் தந்து நிரம்பிய கூந்தலை உடைய தலைவிக்கு. காதல் இயல்போடு தந்தானை- இயற்கையாக காதலை அளித்த தலைவனை. வெறி உற்று எடுத்தாள் - வெறியாட்டை எடுக்கச் செய்தாள். ஆடு தலைகுறைத்தே அடு என்றனள் - ஆட்டின் தலையை வெட்டி பலி கொடு என்றாள்; ஆடு என்ற சொல்லில் முதல் எழுத்தாகிய ஆ என்னும் உயிர் எழுத்தைக் குறைத்து அடு என்றாள் என்பது நயம். ஆவது என்னே - இதனால் ஆகும் பயன் யாது?
வதுைதல் - மை
கையினில் தெல்லிக் கணியென
அன்பர் கணம் உவக்க மெய்யருள் ஈபவன், காந்த
மலைக்குகண் வெற்பில் இவள் மையலுக்கேற்ற மருந்தறி
யாள்தாய்; வரைதல்இன்றி மையினைச் சிந்துவ தால்என் பயன் இந்த மாநிலத்தே,
கையினில் நெல்லிக் கணியென அருள் ஈபவன்: பிரத்தியட்ச தெய்வம் என்றபடி இவள் மையலுக்கு ஏற்ற