பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 6

- கருடர்

திருப்பூரில் பேசப் போயிருந்தபோது திருப்பணி நடந்து கொண்டிருந்த பெருமாள் கோவிலுக்கு அன்பர்கள் அழைத்துச் சென்றார்கள். சுவர்கள் எழும்பியிருந்தன. மேல் தளம் போடவில்லை, "ஏன் இன்னும் மேலே கட்டவில்லை" என்று கேட்டார் இவர். "கருடர் கிடைக்கவில்லை" என்றார் அன்பர். இவர் கேட்ட கேள்வி, பெருமாளுக்குக் கருடர் கிடைக்க வில்லையா? ஆச்சரியந்தான்!" (கருடர் - உத்தரம், கருட பகவான்.)

பல்கலைக் கழகமும் டிகிரியும்

தூத்துக்குடியில் இருபது நாள் கந்தபுராணச் சொற்பொழிவு ஆற்றினார் இவர் வ.உ.சி. கல்லுரிப் பேராசிரியர் ஒருவர் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்திருந்தார். அங்கெல்லாம் வெயில் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் இவர்.

"திருச்சியைவிட மதுரையில் வெயில் அதிகம். இரண்டு டிகிரி கூடவே இருக்கிறது."

"பல்கலைக் கழகம் இருக்கிறதல்லவா?" (டிகிரி - வெப்ப அளவு, استان(

முன்னவர்

ஒரு கூட்டத்துக்கு இவருடைய அன்பர் திரு ச.கு. கணபதி ஐயர் வந்திருந்தார். கூட்டம் முடிந்தவுடன் சிற்றுண்டி தந்தார்கள். முதலில் "இவரிடம் கொடுத்