பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அணிந்த முருகன். ஒருமை மனத்து - இவளையன்றி வேறு யாரையும் விரும்பாத ஒருமை உள்ளத்தோடு.

அணைந்தானை - தலைவனை. யாய் - தாய். பெருமையைக் கொல்வதற்கு எண்ணும் சிறுமை பிடித்தனளே - பெரிய ஆட்டைக் கொல்வதற்கு

நினைக்கின்ற பாவ எண்ணத்தை மேற்கொண்டாள்; பெருந்தன்மையைப் போக்க எண்ணுகின்ற சிறுமைக் குணத்தை ஏற்றாள் என்பது தொனி.

தகரம் - பொன்

நிகரங் கொருவரில் லாக்கும ரேசன்

நிறைஎழில்ான் . குகன் கொங்கி ரிைற்காந்தக் குன்றத்

தலைவன் இக் கோமகள் பால் மிகஅன்பு கொண்ட திறம்அறி

யாள்தாய்; வெறியெடுத்தாள்; தகரங் கழிக்கின் இவள்மேனிப் பொன்னைத் தகர்ப்பதன்றே.

காந்தக் குன்றத் தலைவன் - காந்த மலையிலுள்ள இத் தலைவியின் காதலன். வெறி எடுத்தாள் - வெறியாட்டை எடுக்கச் செய்தாள். தகர் அங்கு அழிக்கின் இவள் மேனிப் பொன்னைத் தகர்ப்பது அன்றே - ஆட்டை அங்கே பலியிட்டால் இந்தத் தலைவியின் மேனியில் பிரிவுத் துன்பத்தால் உண்டான பசலையை அது போக்குவது அல்லவே! பொன் - பசலை; இது பிரிவினால் உண்டாகும் நிறம். . தகரம் கழிக்கின் இவள் மேனிப் பொன்னைத் தகர்ப்பது அன்றே - தகரம் என்னும் உலோகத்தைக் கழித்து விட்டால் இவள் மேனியிலுள்ள தங்கத்தை அது போக்குவது ஆகாதே என்று மற்றொரு பொருள் தொனித்தது. -