பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 இரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அஞ்சு-ஆறு-மூன்று-ஒன்று

வெஞ்சமந் தன்னிற் கொடுஞ்சூ ரனைக்கொன்ற

வேல்முருகன் தஞ்சம் அருள்காந்தக் குன்றினி லேராசி

சக்கரத்தில் அஞ்சையும் ஆறையும் மூன்றாக் குதலின்றி

ஆதிஒன்றை எஞ்சிட்ச் செய்ய நினைத்தனள் அன்னை;

எவன்செய்வதே.

வெம் சமந்தன்னில் - கொடிய போரில். தஞ்சம் அருள் - அடைக்கலம் வழங்குகின்ற. ராசி சக்கரத்தில் - பன்னிரண்டு ராசிகள் உள்ள சக்கரத்தில். அஞ்சையும் ஆறையும் மூன்று ஆக்குதல் இன்றி - ஐந்தாவது ராசியாகிய சிங்கத்தையும் ஆறாவது ராசியாகிய கன்னியையும் மூன்றாவது ராசியாகிய மிதுனம் ஆக்குவதில்லாமல்; சிங்கம் போன்ற தலைவனையும் கன்னியாகிய தலைவியையும் ஒன்றாக இணையச் செய்யாமல் என்பது கருத்து; மிதுனம் - இணை. ஆதி: ஒன்றை - ஆதியாக உள்ள ஒன்றாகிய மேடத்தை; ஆட்டை. எஞ்சிடச் செய்ய இறந்து படச் செய்ய.

சிங்கம், கன்னி, மிதுனம், மேடம் என்னும் ராசிகளை அவற்றின் நிலையைக் குறிக்கும் எண்களால் சுட்டியது ஒரு நயம். -

ஆனை - சிங்கம் - ஆடு

ஊனை உருக்கும் திருப்புகழ்ப் பாடல்

உவந்தபிரான்

தேனையும் பாகையும் போன்மொழி வள்ளி

திருக்கணவன்

தானுறு காந்த மலையில்யாய் ஆணையைத்

தாக்கியஅன் r