பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

தார்கள். இவர் உடனே, "இதோ முன்னவர் கணபதி, அவருக்குக் கொடுங்கள் என்றார். அவர், "முன் அவர்; இப்போது இவர்தாம் என்று இவரைச் சுட்டிக் காட்டினார். "முன் பின் தெரியாமல் சொல்லிவிட்டேனே! என்று வருந்துவது போலச் சொல்லிச் சிரிக்க வைத்தார். இவர். - .

காலையும் மாலையும்

ஒரூருக்குப் பேசப் போனபோது ரெயில் வண்டியில் சென்று காலையில் இவர் அங்கே இறங்கினார். இவருக்குச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலையிட்டு வரவேற்றார்கள். இவர், "ஏது? காலையிலே மாலை வ்ந்துவிட்டதே! என்றார்.

பூபாரம்

பேசிவிட்டு வெளியில் வரும்போது இவருக்குப் போட்ட பெரிய பூமாலையை இவருடைய அன்பர் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தூக்கி வந்தார். அதை தூக்கி வரும்போது சிறிதே சிரமப்படுவது போல இருந்தார். "ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? பூபாரம் தாங்கவில்லையோ?" என்ற கேள்வி இவரிடமிருந்து எழுந்தது. -

பிரம்படி

ஒரு வீட்டில் பிரம்பு நாற்காலியும் வேறு நாற்காலிகளும் போட்டிருந்தார்கள். இவர் அங்கே போனபோது பிரம்பு நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள். அதில் மோட்டுப் பூச்சி இருக்குமோ என்ற பயம் இவருக்கு. ஆனால் அதைச் சொல்லாமல், "பிரம்படி என்றால் எனக்குப் பயம்" என்றார். "அப்படி என்றால்?" என்று அன்பர் கேட்டபோது, "உட்காரும்