பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 136

கற்பகவல்லி மயிலாப்பூர்த் திருக்கோயிலில் எழுந் தருளிய அம்பிகை. சிவபெருமான்_கபாலீசுவரன். ஒடு-பிரமகபாலம். இற்புறமே ஐயம் எடுத்தானோ . வீட்டிற்கு வெளியே வந்து பிச்சை எடுத்தானா. எண்ணினர்.பால் ஐயம் எடுத்தான்-தன்னைத் தியானித்தவர்களிடம் பிச்சை எடுத்தான் என்பது தொனிப் பொருள். சந்தேகங்களை நீக்கினான் என்பது இயல்பான பொருள். ஐயம்.பிச்சை, சந்தேகம்.

இரண்டு வடு

கச்சிப் பதியாளன் . காமக் கண்ணிநாதன். நச்சிஒரு மாவின்கீழ்

நண்ணினண்காண் அம்மானை; நச்சிஒரு மாவின்கீழ்

நண்ணினனே யாமாயின் இச்சையுது காய்கனிகள்

எய்தினனோ அம்மானை ?

இரண்டுவடு எய்தி

இருந்தானங் கம்மானை. .

கச்சிப்பதியாளன்-காஞ்சிபுரத்தில் உள்ள இறைவன். காமக்கண்ணி நாதன்-காமாட்சியின் கணவன். நச்சி - விரும்பி. ஒரு மா-ஏகாம்பரம். இரண்டு வடு எய்தி - இரண்டு மாவடுக்களைப் பெற்று என்பது தொனிப் பொருள். இறைவியின் தகில் தழும்பும் வளைத் தழும்புமாகிய இரண்டு வடுக்களை அடைந்தான் என்பது

இயல்பான பொருள்.

வடு - மாவடு, தழும்பு.