சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 138
வைத்துக் கொண்டானாதலின், அறிவிலே குறை உண்டோ என்று கேட்டாள். -
குறை மதியன் - குறைவான புத்தியுடையவன்
என்பது தொனிப் பொருள்; குறைவாக உள்ள
பிறைச்சந்திரனை அணிந்தவன் என்பது பொருந்தும்
பொருள். . - - - -
அஞ்சக்கரன்
மாதேவ னுந்துளவ மாலும் ஒருவரென வேதாந்தம் பேசி விளக்குமே அம்மானை; வேதாந்தம் பேசி விளக்குமே ஆமாயின் ஆதாரம் ஏதும் அறைவதுண்டோ அம்மானை ? அஞ்சக் க்ரனென்ப தாதாரம் அம்மானை!
துளவமால் - துழாய் மாலையை அணிந்த திருமால்,
வேதாந்தம் - உபநிடதம். அஞ்சக்கரன் என்று இருவரையும் சொல்வதே ஆதாரம் என்றபடி. அஞ்சக்கரன் - அஞ்சுஅக்கரன் (பஞ்சாட்சரத்தின்
பொருளாக உள்ள சிவ பெருமான், அம் சக்கரன் (அழகிய சக்கராயுதத்தை உடைய திருமால்) என்று இருவருக்கும் பொருந்துவது காண்க. -
அன்னம் காணார்
திருத்தமுறு மாமயிலைச்
சீரார் கபாலியார் - உருத்துவரு நஞ்சமுதாய்
உண்டனர்காண் அம்மானை; உருத்துவரு நஞ்சமுதாய்
உண்டனர்ே ஆமாயின், அருத்தும் உணவேதும்
ஆர்ந்திலரோ அம்மானை ? அன்னங்கா னார்என்
றறைகுவரே அம்மானை.