பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iso சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

திருத்தம் - செப்பம்; தீர்த்தமும் ஆம். உருத்துவரு - கோபித்து வந்த தஞ்சு அமுதாய் உண்டனர் . ஆலகால விஷத்தை உணவாக உண்டார். அருத்தும் உண்ணச் செய்யும். ஆர்த்திலரோ - உண்ணவில்லையோ. அன்னம் காணார் - சோற்றைக் காணாத பட்டினி உடையார் என்பது தொனி; அன்னமாக உருவெடுத்த பிரமனால் காணப்படாதவர் என்பது இயல்பான பொருள்.

பன்னர் கி.வா.ஜ.

'குழந்தைகளே! நீங்கள் குறைந்தது 500 குறட்பாக்களையாவது மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் ஓர் அரசியல்வாதி ஆரம்பப்பள்ளியில்வழங்கிய அறிவுரை. உயர்நிலைப் பள்ளியில் அதே அரசியல்வாதி கூறினார்: மாணவச் செல்வங்களே! நீங்கள் 1000 குறட்பாக்களையாவது கற்று செம்மை பெற வேண்டும்' என்றார். கல்லூரியில் அதே அரசியல்வாதி முழங்கினார்: இளங்க்ாளைகளே இந்நாட்டின் கண்களே! உங்கள் வாழ்வு வளம் பெறக் குறைந்தது 2000 குறட்பாக்களை- ! - யாவது கற்று மேன்மை பெறல் வேண்டும் என்றார். அவையில் எழுந்த சிரிப்பொலி அடங்கப் பல நிமிடங்கள் ஆனது. 2000 குறட்பாக்கள் எங்கே? சில அரசியல்வாதிகளின் அறிவுரைகள் இப்படி தமிழே புரியாமல் நாட்டில் உலவுகின்றன.