பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின் சேர்க்கை

தட்டை இலை

ஒரு சமயம் நண்பர் வீட்டில் சென்று விருந்துண்ணு கையில் வழக்கமாகப் போடும் இலைக்குப் பதிலாக இந்த முறை, தட்டில் உணவைப் பரிமாறினார்கள். இவர் சிரித்துக் கொண்டே "உங்களுக்கு எப்பொழுதுமே தட்டை இலை" என்று சொன்னபோது உபசரித்த வீட்டினர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

(தட்டை இலை தட்டுப்பாடே இல்லை; பணத்

தட்டுப்பாடே இல்லை; உண்ணுவதற்கு இலைக்குப் பதிலாக தட்டை உபயோகித்தல்)

"படி, படி,"

ஒரு சமயம் பாரதியார் விழாவில் "ஒரு படி மேலே" என்ற த ைல ப் பி ல் சொற்பொழிவு ஆற்றி விட்டுத் திரும்பி நடந்து வருகையில் சில படிகளில் இறங்க வே ண் டி யிருந்தது. இவர் படிகளைக் கவனிக்கவில்லையோ

- என்று ஐயுற்ற ஒரு "T - சிறுவன், "படி படி-ساس۔ என்று இவரிடம் குறிப்பிட்டான். இவர் சிரித்துக் கொண்டே, "எவ்வளவு நல்ல அறிவுரை! நான் எப்பொழுதுமே மாணவனாக இருக்க ஆசைப்