பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 8

இடத்தில் அடியில் பிரம்புதானே இருக்கிறது?" என்று தெளிவித்தார் இவர். -

பிட்டும் அடியும்

நாகர்கோயிலில் ஒரு சமயம் இந்துக் கல்லூரியில் பேசப் போயிருந்தார் இவர். கூட்டம் முடிந்த பிறகு சிறு விருந்தளித்தனர்.

தமிழ் ஆசிரியர்கள் எல்லாரும் வந்திருந் தார்கள். மற்றச்

சி. ற் று ண் டி க ளு ட ன் ஆளுக்கு ஒரு நேந்திரம் பழமும் வைத்தார்கள். அப்போது ஒராசிரியர் தமக்கு வைத்த பழத்தைப் பாதியாக ஒடித்து ஒரு பாதியை மகாலிங்கம் என்ற தமிழ் விரிவுரையாளருக்குக் கொடுத்தார். இவர், "சொக்கலிங்கத்துக்குப் பிட்டுக் கொடுப்பார்கள். நீங்கள் மகாலிங்கத்துக்குப் பிட்டு கொடுக்கிறீர்களே!" என்றார். அதை வாங்கிக் கொண்ட மகாலிங்கம், "எது கொடுத்தாலும் சரி; அடி கொடுக்காமல் இருந்தால் சரி" என்றார். காம்பு உள்ள பகுதியைத்தான். அவருக்குக் கொடுத்திருந்தார். ஆகையால் உடனே இவர், "அடியுந்தானே கொடுத்திருக்கிறார்?" என்றார். (பிட்டுவிண்டு, பிட்டமுது. அடி-அடிப்பாகம், அடிக்கும் அடி)

- கூடப் படித்தவர்

விவேகானந்தர் கல்லூரியில் அமரர் டி.என்.

சேஷாத்திரி முதல்வராக இருந்தார். அவரும் இவரும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.