பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

- சாகரத்துக்கு.....

ஒரு சமயம் இவர் பவானிக்கு அருகிலுள்ள சாகரம் என்ற ஊருக்கு பஸ்ஸில் செல்லுகையில், கண்டக்டர் இவரைப் பார்த்து "எங்கு செல்ல வேண்டும்?" என்றார். அதற்கு "சாகரம்' என பதிலளித்தார். உடனே கண்டக்டர் ஒரு சீட்டைக் கிழித்து இவரது கையில் கொடுத்து, "இந்தாங்க சாகரத்துக்கு என்றார். அதற்கு உடனே இவர், "சார் நான் சாகரத்துத்துப் போகல, ஒரு சொற்பொழிவுக்காகச் செல்லுகிறேன்" என்றாராம்.

இளைஞர்கள் பின் வாங்கக் கூடாது!

ஒரு சமயம் இவர் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்த போது, அருகில் இருந்த திரு.குமரி அனந்தன் அவர்கள், சில பேப்பர்களை ஒன்று சேர்ப்பதற்காக, "பின் (pin) இருக்குமா?" என்று கேட்க, உடனே இவர், - இளைஞர்களெல்லாம் பின் வாங்கக் கூடாது' என்றார். திரு. குமரிஅனந்தன் விடாப்பிடியாக உடனே இவரைப் பார்த்து, "முதியோர்களெல்லாம் ஊக்கு வித்தால், இளைஞர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்றாராம்.

துப்பு: துப்பு:

அல்லயன்ஸ் அதிபர் வி.குப்பு:ஸ்வாமி ஐயர், எங்கு சென்றாலும் ஒரு காப்பியிங் பென்சில் ஒன்றை வைத்திருப்பார். ஏதாவது ஒரு முக்கியமான விஷயம், (துப்பு) கிடைத்தால் அதைக் கையில் குறித்துக் கொண்டு, கி.வா.ஜ. அவர்களிடம் அது குறித்து ஆலோசனை செய்வது வழக்கம். இப்படி ஒருசமயம் அல்லயன்ஸ் ஐயர் இடது கையில் குறித்துக் கொண்ட விஷயத்தை கி.வா.ஜ.