பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அன்று பாராட்டுரை வழங்கிய இவர் இது குறித்துக் கூறியது: - -

"எல்லோரும் மாலைக் காலத்தில் மாலை போட்டார்கள். ஒரே ஒருவர் மட்டும் மாலைக் காலம் போய் விட்டதைப் புரிந்து கொண்டு பழம் கொடுத்தார். அது தான் சரி. அவர் மாலை வாங்கத். தாமதமாகச் சென்றிருப்பார். அதற்குள் மலர் காய்த்துப் பழுத்திருக்கும்!" -

- நானும் பாட்டாளியே

கலைவாணர் அரங்கத்தில் தொழிலாளர் சங்க விழாவில் ஒரு கவியரங்கம். அதற்குத் தலைமை: கி.வா.ஜ. தலைப்பு: பாட்டாளி. தொழிலாளர்கள் திரண்டு வந்திருந்தனர். "நானும் உங்களைப் போல ஒரு பாட்டாளிதான். காரணம், பாட்டால் (கவிதையால்) உங்கள் மனத்தை ஆளவந்திருக்கிறேன் என்று தன் உரையைத் துவக்கினார் கி.வா.ஜ. - -

சர்வீஸ் செய்ய வாய்ஸ்

ஒரு சமயம் திரு.பித்துக்குளி முருகதாஸ் அவர்களை பாராட்டி விழாவில் இவர் பேசியது:

மக்களுக்கு இசை மூலம் இன்று உணர்ச்சி ஊட்டும் பணியில் தனது தொண்டை (Service) தொடர்ந்து செய்வதற்காகத் தான் இந்த அறுபதாவது வயதிலும் இறைவன் பித்துக்குளி முருகதாஸ் அவர்களுக்குத் த்ொண்டை(voice) அளித்து இருக்கிறான்" . .