பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 146

உரிய இடத்துக்கு வந்த மகுடம், சிலம்பு-செங்கோல்.

மயிலை பாரதீய வித்யா பவன் அரங்கில் சிலப்பதிகாரச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய ம.பொ.சிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அப்போது ம.பொ.சிக்குச் சிறிய வெள்ளிக் கிரீடம், வெள்ளிச் சிலம்பு, வெள்ளிச் செங்கோல் இவை மூன்றும் பரிசளிக்கப்பட்டன. - --

பாராட்டுரை வழங்கிய இவர் கூறினார்: "சிலப்பதிகாரத்தில் ஒர் அரசன் முடி இழந்தான். ஒர் அரசன் செங்கோல் இழந்தான். ஒரு குடிமகள் சிலம்பு இழந்தாள். செங்கோல் இழந்த அரசன் நெடுஞ்செழியன், முடி இழந்த அரசன் இளங்கோ. சிலம்பு இழந்த குடிமகள் கண்ணகி. ஆனால் பல ஆண்டுகள் கழித்து இவை எங்கும் போய் விடாமல் ஒருவரிடம் வந்து சேர்ந்து இருக்கின்றன. சேர்ந்த இடம் அவற்றிற்கு உரிய இடம் தான். இவற்றை அவர் இனி இழக்காமல் இருக்க வேண்டும்." .. - - -

கி.வா.ஜ.வின் சமயோசித அறிவு அவையோரின் கரகோஷத்தைப் பெற்றது. -

. . முடி சூடிய கி.வா.ஜ. மயிலையில் நடந்த ஒரு கம்பராமாயணப் பட்டி மண்டபத்திற்கு கி.வா.ஜ. நடுவராக இருந்தார்.

இறை. வணக்கமாகப் பாடிய பாடல் ராமனுக்கு முடிசூட்டும் விழாப் பாடல். இவர் சிலேடையாக,