பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

"இப்பாடலுக்கு ராமன் மட்டுமல்ல; தானும் பொருத்தமானவன்" எனக் கூறினார்.

காரணம் அப்பாடல் பாடும் போது கி.வா.ஜ. தற்செயலாக அவிழ்ந்த தனது குடுமியை முடிந்து கொண்டார். புரிந்து கொண்ட கூட்டத்தினர் கைதட்டி ரசித்தனர். . . -

‘கருங்கச் சொன்னார்; உரக்கச் சிரித்தோம்’

ஒரு விழாவில் இவர் கூறியது:

"பாரதீய சாகித்ய பரிகrத்" என்ற அமைப்பில் விழா ஒன்று சென்னை தி.நகர் இந்தி பிரசார சபாவில் காந்திஜி தலைமையில் நடந்தது. அதற்கு வரவேற்புரை நிகழ்த்த வேண்டியவர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர். அவரை அழைத்துக் கொண்டு ராஜாஜி மேடைக்குப் போகிறார். விழா சீக்கிரம் முடிந்து ராஜாஜியும் காந்திஜியும் வேறு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டிய அவசரம். அந்த திலையில் காந்திஜியின் அருகில் நின்று கொண்டிருத்த திரு.மகாதேவ தேசாயைச் சுட்டிக்காட்டி "இவர் யார்?" என்று ராஜாஜியைத் திரு உ.வே.சா. கேட்டார். அவரைப்பற்றி விவரமாக அறிமுகம் செய்ய ராஜாஜிக்கு நேரம் இல்லை. எனவே, 'உங்கள் பின்னால் வருகிற கி.வா.ஜ. உங்களுக்கு எப்படியோ அப்படித்தான் காந்திஜிக்கு அவரும் என்று சுருக்கமாக ராஜாஜி. அறிமுகம் செய்ததும் தமிழ்த் தாத்தா உரக்கச் சிரித்துவிட்டு என்னையும் திரும்பிப் பார்த்தார். அவர் அருகில் இருந்த நானும் சிரித்து விட்டேன்". . .