பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 148

சிலேடைப் போட்டி

வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒருநாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதிப் பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை புகல வந்த கி.வா.ஜ., பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்" என்றதும் அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறைவணக்கம் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, "நாவால் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. பேனாவால் கெளரவிக்கிறார்" என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

உண்டியா ? வண்டியா ?

மகாவீரர் ஜெயந்தி சென்னை ராஜாஜி ஹாவில் கொண்டாடப்பட்டது. ஒரு நாள் முழுவதும் விழா. காலையில் சிலரும் மாலையில் சிலரும் பேசினார்கள்.

காலை விழாவுக்கு வந்திருந்த கி.வா.ஜ. மாலை விழாவில் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இடைவேளையில் வீட்டுக்குச் சென்று வர எண்ணினார். ஒருக்கால் உணவுக்கு அங்கே ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்ற ஐயமும் எழுந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டார். - - - .

- சிலேடையில் அவரிடம், "உண்டியா? வண்டியா? என்றதும் அவர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.