பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 . . சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.

- சிரித்துக் கொண்டே கி.வா.ஜ. விளக்கினார். "உணவுக்கு ஏற்பாடு உண்டா? அல்லது வண்டி (கார்) மூலம் என்னை வீட்டுக்கு அனுப்புகிறீர்களா?"

அவர் உணவு உண்டு என்றதும், "உண்டால் திண்டு வேணும் எனக்கு (அதாவது தூக்கம் வரும்); ஆகவே வீட்டுக்கே போகிறேன்" என்றார்.

இரண்டும் சிவப்பு

"வாரியார் விரிவுரை" என்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா ஆஸ்திக சமாஜத்தில் நடந்தபோது பாராட்டுவிழா புகல வந்த திரு. கி.வா.ஜ. பேச ஆரம்பித்தார்.

அவருக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக வானதி பதிப்பக அதிபர் திரு. திருநாவுக்கரசு ஒரு பேனாவை அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட திரு.கி.வா.ஜ., "செவ்வேள் முருகன் வாரியாருக்குப் பேச நாவு கொடுத்தான். நாவுக்கரசு எனக்குப் பேனா கொடுத்தார். முருகன் கொடுத்த நாவும் சிவப்பு. இவர் கொடுத்த பேனாவும் சிவப்பு" என்றதும் கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. - . .

நாங்கள் படும் பாட்டை...

நாங்களும் கட்டளைக் கலித்துறை, அந்தாதி, அனுபூதி, அலங்காரம் எல்லாம் பாடுகிறோம். அருணிகிரிநாதரும் பாடினார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? . . . . -

நாங்கள், "படும் பாட்டை பாட்டாகப் பாடுவோம். அருணகிரிநாதர் பாட்டை நம் மனசில் படும்படி