பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் சிவாஜ. 15:

"நெருக்கடி அதிகமாக உள்ளதே என்று என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார். அப்படிக் கூறுவது தவறு. மனம் ஒன்றுபட்டுக் கூடும் கூட்டத்தில் நெருக்கம் அதிகம் என்று கூறவேண்டும். மனம் வேறுபட்டவர்கள் கூடினால் அங்குதான் நெருக்கடி இருக்கும்". -

எலும்பும் மயிலையும்.

"அண்மையில் மயிலையில் ஒரு பெண்கள் கல்லூரியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது க்ண்ட காட்சி என் எலும்பை உருக்கியது. அக்கல்லூரி மாணவிகளில் பலர் உடலில் ஆடைமட்டுமல்ல, சதையே இல்லாமல் எலும்புக் கூடு களாகக் காட்சி அளித்தார்கள்" -

"திருஞானசம்பந்தர். மயிலையில் எலும்பைப் பெண்ணாக்கிய வரலாறு படித்திருக்கிறேன். ஆனால், அதே மயிலையில் பெண்களை எலும்பாக்கும் ரசவாதமும் தற்போது நடப்பது கண்டு மனம்

ஏற்றுமதித்தால் ஏற்றுமதி

ஹா.கி.மாலம் என்ற கவிஞரின் ിങു நாள் தி.நகரில் கொண்டாடப்பட்டது. அவரது கையெழுத்துப் பிரதிகள் அச்சில் ஏறாமல் இருப்பது பற்றி வருத்தம் தெரிவித்து கி.வா.ஜ. பேசியது: .

"நாம் நல்ல அரும்பெரும் தமிழ் இலக்கியங்களை ஏற்று மதித்தால் தான் அவை பிற நாடுகளுக்கு