பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கிவாஜ 154

கரன்சி நோட்டுகளும் கோயில் சிலைகளும்!

விஷ்வஹிந்து பரிஷத் கருத்தரங்கில் கி.வா.ஜகந்நாதன் பேசியது. .

"கோயில்களில் உள்ள சிலைகளை நாம் 'தெய்வமாக: எண்ணி வணங்கினால் நிச்சயம் அவை நமக்கு அருளை அள்ளிக் கொடுக்கும். நமது மனது மட்டும் நிச்சயம் அவற்றை தெய்வம் என்றே நம்பவேண்டும். சிலை என்று எண்ணக்கூடாது.

கரன்சி நோட்டுக்களை நாம் பார்க்கும்போது, வாங்கும் போது, கொடுக்கும் போது அவற்றை காகிதம்தானே என்றா எண்ணுகிறோம்? இல்லையே! பணம் என்றுதானே நம்புகிறோம். நினைக்கிறோம். உண்மையில் அவை பணம் இல்லையே! அவை பிராமிசரி நோட்டுக்கள் தானே அவற்றில் எழுதியுள்ளதைப் படியுங்கள். என்ன எழுதியிருக்கிறது?

‘I Promise to pay the Bearer the sum of...Rupees என்று போட்டு ரிசர்வ் பேங்க் கவர்னரின் கையெழுத்து இருக்கிறது. -

அதுபோல கோவில் சிலைகளை மதித்தால் அவை இறைவனிடம் நமக்கு அருளை வாங்கிக் கொடுக்கும்".

கி.வா.ஜ. வின் ஆராய்ச்சி கம்பன் விழாவில் கி.வா.ஜ. -

கோசல நாடு நான்குவித புகை நிரம்பிய நாடு என்று சொல்லி அது, அறம் பொருள் இன்பம் வீடு' என்ற